![]() |
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
|
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
முகப்பு - பொதுவான செய்திகள்
|
||||||||||||||||||||||||||||||||||||||||
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) இப்பகுதியில் நாம் நமது வாழ்வில் அன்றாடம் காணுகின்ற,இயற்கையான உணவு வகையான காய்கறிகள், மற்றும் பழங்கனிகளின் பயன்பாடுகளும், அதன் பலன்களும் நமக்கும், நம்முடைய உடல் நலத்திற்கும் எவ்வாறு ஏற்றதாக உள்ளது என்பதை நாம் அனைவர்களும் அறிந்து வைத்துள்ளோம், நாம் அவைகளை அறிந்து வைத்துள்ள அளவிற்கு நாம் அதை நமது அன்றாட உணவில் பயன் படுத்தி உட்க்கொண்டு வருகிறோமா? என்றால் நிச்சயமாக இல்லை என்றே கூறலாம்!, அந்த அளவுக்கு நாம் அதிலிருந்து விளகியே இருந்து வருகிறோம். இதன் காரணம் அல்லாஹ் நமக்கு வழங்கியுள்ள அப்பொருகளில் நாம் அக்கரை கொள்ளாததுதான். இந்த அற்புதமான காய்கறிகளிலும், பழங்கனிகளிலும் ஏராளமான நன்மைகள் அடங்கியுள்ளது, இதை நாம் தவிர்த்து வருகின்ற காரணத்தால்தான் நம் உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்புச் சக்தி குறைந்து, நாம் பல விதமான நோய்களுக்கு ஆட்பட்டு, அதைத் தீர்க்க மருந்தே உணவாக உட்க்கொண்டு வரும் நிலைமைகளை நாம் கண்டு வருகிறோம். இந்த நிலை மாறவேண்டும் நாம் எந்த அளவுக்கு மீன்,இறச்சி,கோழி போன்ற தாதுப்பொருட்களை நமது உணவில் சேர்க்கிறோமோ, அந்த அளவுக்கு மற்றொரு தாது வகையான காய்கறி,பழங்கனிகளையும் நாம் நமது உணவில் சேர்க்கவேண்டும், அது மட்டுமல்ல, இந்த தொகுப்பில் நாம் எந்தெந்த காய்கறிகளை எடுத்துக்கொள்வது அதனால் என்னனென்ன நன்மை என்ற விபரமும் தங்களுக்கு தரப்பட்டுள்ளது, அதன்படி சுகக்குறைவு உள்ளவர்கள் அந்தந்த காய்கறிகளை உணவில் சேர்த்துக் கொண்டால், நமது உடல் சுக குறைவு நீங்குவதோடு, நம் உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியையும் இன்ஷா அல்லாஹ் நாம் பெறலாம், அத்தோடு மருந்து, மாத்திரைகளிருந்தும் நமது உடலை பாதுகாத்துக் கொள்ளலாம்.எனவே நாம் தொகுத்து வழங்கியுள்ளதையும், காய்கறிகளையும் உரிய முறையில் பயன்படுத்தி நமது உடல் நலத்தை பேனி பாதுக்காத்துக்கொள்ள நாம் முயல்வோமாக!.
|
||||||||||||||||||||||||||||||||||||||||
![]() |
வாழைக்காய் என்ன இருக்கு: கொழுப்புச் சத்து, விட்டமின் இ. யாருக்கு நல்லது: வயிற்றுப்புண், ரத்தமூலம் உள்ளவர்களுக்கு பிஞ்சாக சாப்பிட நோய் கட்டுப்படும். யாருக்கு வேண்டாம்: வாய்வு, இதய, மூட்டுவலியுள்ளவர்கள் சாப்பிடக்கூடாது. பலன்கள்: உடலுக்கு உரம் அளிக்கும். மலச்சிக்கலை உடைக்கும். |
|||||||||||||||||||||||||||||||||||||||
![]() |
வெள்ளரிக்காய் என்ன இருக்கு: விட்டமின் ஏ, பொட்டாசியம் யாருக்கு நல்லது: சிறுநீர் பிரியாமல் அவதிபடுபவர்கள், நீரிழிவு நோயாளிகள் வெள்ளரிக்காய், வெள்ளரி விதை சாப்பிட உடனடி நிவாரணம் கிடைக்கும். யாருக்கு வேண்டாம்: ஆஸ்துமா நோயாளிகளுக்கு. பலன்கள்: உடலுக்கு குளிர்ச்சியைத் தந்து சிறுநீர் வெளியேற உதவும். |
|||||||||||||||||||||||||||||||||||||||
![]() |
சுண்டைக்காய் என்ன இருக்கு: விட்டமின் சி யாருக்கு நல்லது: சிறுவர்கள் வாரம் இருமுறை சாப்பிட்டால் வயிற்றில் பூச்சி சேராது. ஆஸ்துமா நோயாளிகள் தினசரி சாப்பிட மூச்சுத்திணறல் குறையும். கர்ப்பிணிப் பெண்கள் மாதம் ஒரு நாள் சாப்பிடலாம். பலன்கள்: கிருமிகளை, வயிற்றுப் பூச்சிகளை அழிக்கும். நுரையீரலுக்கு செயல் திறன் தரும். சளியைக் கரைக்கும். |
|||||||||||||||||||||||||||||||||||||||
![]() |
பலாக்காய் என்ன இருக்கு: சுண்ணாம்புச்சத்து யாருக்கு வேண்டாம்: வாத நோய், அஜீரணக் கோளாறு உள்ளவர்களுக்கு. பலன்கள்: செக்ஸ் உணர்வைத் தூண்டும். போதை நச்சுக்களை முறிக்கும். பால்வினை நோய்களை மட்டுப்படுத்தும். |
|||||||||||||||||||||||||||||||||||||||
![]() |
பப்பாளிக்காய் என்ன இருக்கு: விட்டமின் ஏ, கைபோ பாப்பைன் என்சைம். யாருக்கு நல்லது : மூட்டுவலி உள்ளவர்களுக்கும், உடல் எடையை குறைக்க யாருக்கு வேண்டாம்: கர்ப்பிணிப் பெண்கள் முதல் எட்டு வாரங்களுக்கு தவிர்க்கவும். பலன்கள்:சருமத்தில் சுருக்கம் விழாமல் பாதுகாக்கும். குடல் பூச்சிகளைச் அழித்துச் சுத்தம் செய்யும். |
|||||||||||||||||||||||||||||||||||||||
![]() |
||||||||||||||||||||||||||||||||||||||||
![]() |
களாக்காய் என்ன இருக்கு: விட்டமின் ஏ, சி. யாருக்கு நல்லது: மந்தமான பசி, மசக்கை வாந்தி, அதிக பித்த எரிச்சல், பித்த யாருக்கு வேண்டாம்: தொண்டைவலி உள்ளவர்கள் சாப்பிடக்கூடாது. பலன்கள்: கண் பார்வையைத் தெளிவாக்கும். சாப்பாடு ஏற்கும் திறனை அதிகரித்து, பித்தத்தை கட்டுப்படுத்தும். |
|||||||||||||||||||||||||||||||||||||||
![]() |
![]() |
நெல்லிக்காய் என்ன இருக்கு: விட்டமின் சி, செல்லுலோஸ், கார்போ ஹைட்ரேட், கால்சியம், யாருக்கு நல்லது : பிளட் பிரஷர், சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. பலன்கள்: இளமையை நீடிக்கச் செய்யும். தலைமுடி, தோல், கண் பார்வையை
|
||||||||||||||||||||||||||||||||||||||
![]() |
காரட் என்ன இருக்கு: விட்டமின் ஏ, கார்போஹைட்ரேட், தாது உப்புகள், மெலோனிசைட்ஸ் என்ற நிறமி அணுக்கள். யாருக்கு நல்லது: அசிடிட்டி தொந்தரவு உள்ளவர்களுக்கு குழந்தைகளுக்கு. கர்ப்பிணிப் பெண்களுக்கு. யாருக்கு வேண்டாம்: குழந்தை பேறு இல்லாதவர்கள் அதிகம் சேர்க்க வேண்டாம். சர்க்கரை நோயாளிகள் சாப்பிடக்கூடாது. பலன்கள்: கண் பார்வைக்கு உகந்தது. உடல் பருமனாகாமல் காக்கும். காரட் சாறுடன் பத்து மிளகு சேர்த்து சாப்பிட்டுவர உடல் கழிவுகள் வெளியேறும். |
|||||||||||||||||||||||||||||||||||||||
![]() |
பீன்ஸ் என்ன இருக்கு: புரதம், கார்போ ஹைட்ரேட், விட்டமின் ஏ, தாது உப்புகள். யாருக்கு நல்லது: ரத்தக் கொதிப்பு, நீரிழிவு நோயாளிகளுக்கு நல்லது. யாருக்கு வேண்டாம்: குடைச்சல், ஏப்பம், வயிற்று வலி உள்ளவர்கள் தவிர்க்க வேண்டும். ஜீரணத் தொந்தரவு ஏற்படும். பலன்கள்: பித்தம் தணியும், பார்வை தெளிவு, சருமப் பளபளப்புக்கு உதவும். வாயு நீக்கும். |
|||||||||||||||||||||||||||||||||||||||
![]() |
பீட்ரூட் என்ன இருக்கு: க்ளூகோஸ் யாருக்கு நல்லது: ரத்தச் சோகை உள்ளவர்கள் தொடர்ந்து 45 நாட்கள் பீட்ரூட் சூப் சாப்பிட்டு வர சோகை அடியோடு விலகும். வளரும் குழந்தைகள் அடிக்கடி சாப்பிட்டால் கண், நகம், பல் நன்கு வளரும். யாருக்கு வேண்டாம்: சர்க்கரை நோயாளிகள் சாப்பிடக்கூடாது. பலன்கள்: ரத்தத்தை வளப்படுத்தும். சுறுசுறுப்பை அளிக்கும். மேனி நிறம் பெறும். |
|||||||||||||||||||||||||||||||||||||||
![]() |
நூல்கோஸ் என்ன இருக்கு: சுண்ணாம்புச் சத்து யாருக்கு நல்லது: ரத்தத்தில் ஹீமோகுளோபின் குறைவாக உள்ளவர்களுக்கு, சர்க்கரை நோயாளிகளுக்கு. யாருக்கு வேண்டாம்: உப்புச் சத்து அதிகம் உள்ளவர்களுக்கு. பலன்கள்: ரத்தச் சிவப்பணுக்களை பெருக்கும். ரத்தச் சோகையை நீக்கும். என்ன இருக்கு: நீர்ச்சத்து, கால்சியம், பொட்டாசியம், சுண்ணாம்பு, இரும்புச் சத்து. யாருக்கு நல்லது: சீறுநீரகக் கல் அடைப்பு, பித்தப்பை கல் உள்ளவர்கள் வாரம் இரண்டு நாள் சாப்பிட்டுவர, கல் கரைந்து வெளியேறும். யாருக்கு வேண்டாம்: ஆஸ்துமா நோயாளிகளுக்கு. பலன்கள்: அதிகம் குளிர்ச்சி தரும். வாயுவை வெளியேற்றும். |
|||||||||||||||||||||||||||||||||||||||
![]() |
முள்ளங்கி (சிவப்பு) என்ன இருக்கு: கந்தகம், கால்சியம், விட்டமின் சி. யாருக்கு நல்லது: ஹைபர் அசிடிட்டி உள்ளவர்களுக்கு. பலன்கள்: கை, கால், மூட்டு வீக்கத்தைக் குறைக்கும். ரத்தத்தில் யூரிக் ஆசிட் அளவைக் குறைக்கும். மித உஷ்ணம் தரும். சிறுநீரை வெளியேற்றும். |
|||||||||||||||||||||||||||||||||||||||
![]() |
காலிஃபிளவர் என்ன இருக்கு: பொட்டாசியம், சோடியம், இரும்பு, பாஸ்பரஸ், மெக்னீசியம், விட்டமின் ஏ, இ. யாருக்கு நல்லது: புற்றுநோயால் அவதிப்படுபவர்களுக்கு. எதிர்ப்பு சக்தியைத் தரும். புற்றுநோய் வளர்ச்சியை கட்டுப்படுத்தும். பலன்கள்: மலச்சிக்கலை போக்கும். உடலை இளைக்கச் செய்யும். |
|||||||||||||||||||||||||||||||||||||||
![]() |
முட்டைக்கோஸ் என்ன இருக்கு: சோடியம், இரும்பு பாஸ்பரஸ், கால்சியம், விட்டமின் ஏ, இ. யாருக்கு நல்லது: சர்க்கரை நோயாளிகளுக்கு மிக நல்லது. யாருக்கு வேண்டாம்: பனிக்காலத்தில் ஆஸ்துமா நோயாளிகள் சாப்பிடக்கூடாது. கருப்பையில் திசு வளர்ச்சி உள்ளவர்கள் சாப்பிடக்கூடாது. பலன்கள்: ஆண்மைச் சக்தியை ஊக்குவிக்கும். கிரேக்க நாட்டின் அந்தக் கால வயாக்ரா. மலச்சிக்கலை விலக்கிடும். தாது பலம் பெருகும். இளமையை தக்க வைக்கும். |
|||||||||||||||||||||||||||||||||||||||
![]() |
நார்த்தங்காய் என்ன இருக்கு: சிட்ரஸ் ஆசிட் யாருக்கு நல்லது: அஜீரண கோளாறு உள்ளவர்களுக்கு. யாருக்கு வேண்டாம்: வயிற்றுப்புண் அல்சர் நோயாளிகள் சாப்பிடக்கூடாது. பலன்கள்: வாயுத் தொல்லையை விலக்கி நெஞ்சுக் கரிப்பை நீக்கும். அதிகப்படியான அமில சுரப்பை கட்டுப்படுத்தும் |
|||||||||||||||||||||||||||||||||||||||
![]() |
![]() |
ஆல்ரவுண்டர் திராட்சை: பலன்கள்: திராட்சை கருங்கடலுக்கும் காஸ்பியன் கடலுக்கும் இடையில் தோன்றியதாக வரலாறு கூறுகிறது. உலக விளைச்சலில் பாதி மதுவுக்கும், மீதி உணவுக்குமாக இது பயன்படுவதாக தகவல்கள் கூறுகின்றன. இதிலுள்ள ‘குளுக்கோஸ்’ விரைவில் ரத்தத்தை அடைந்து சக்தி தருகிறது. இரத்த உற்பத்தியையும் செய்கிறது. மேலும், மலச்சிக்கல்,ஆஸ்துமா,ஒற்றைத்தலைவலி என பல்முக குண ஊக்கியாய் பணிபுரிகிறது. |
||||||||||||||||||||||||||||||||||||||
![]() |
![]() |
|||||||||||||||||||||||||||||||||||||||
![]() |
எலுமிச்சை பலன்கள்: மருத்துவமனையாகும் எலுமிச்சை: எவரெஸ்ட் சிகரத்தை முதலில் எட்டிய வீரர்கள் இந்தச் சாற்றைப் பருகியே சாதித்ததாக கூறினர். இதன் முக்கிய சேர்க்கை ‘சிட்ரிக் அமிலமும்’, ‘வைட்டமின் சி’ யும் தான். இரத்த வாந்தியை இது நிறுத்தும். நுரையீரல், குடல், தொண்டை, ஜலதோஷம், காலரா, உடல் பருமன், நல்ல பசி என அனைத்துத் துறைகளிலும் இது பணியாற்றி சிறந்த மருந்தகமாய் திகழ்கிறது. |
|||||||||||||||||||||||||||||||||||||||
![]() |
||||||||||||||||||||||||||||||||||||||||
![]() |
அத்திப்பழம் பலன்கள்: அத்தி தரும் ஆரோக்கியம்: இந்தப் பழம் இறைமறை குர்ஆனில் கூறப்பட்டுள்ளது. ஹோமரின் காவியம் பேசுகிறது. பைபிளிலும் இதன் வாசம் வீசுகிறது. இதில் விட்டமின் ‘சி’ இரும்புச் சத்து, புரதம், கொழுப்பு, மாவுச்சத்து இதிலுண்டு. தேயும் எலும்புக்கு வேண்டிய கால்சியம் இதில் உள்ளது. பத்தே நாளில் வீரியம் தரும் சுவரொட்டிகளுக்கு மத்தியில், இப்பழம் உண்மையிலேயே ஆண்மையைத் தட்டியெழுப்புகிறது. மூலநோய்க்கும், மூளைச் சோர்வுக்கும் இது அருமருந்து. முதுமையிலும் வேகமாக நடந்த காந்திஜி இளமையில் சாப்பிட்டது இதைத்தான். |
|||||||||||||||||||||||||||||||||||||||
![]() |
ஆரஞ்சு பலன்கள்: ஆரஞ்சும் இன்னொரு தாய்ப்பாலே: தாய்ப்பால் தரமுடியாத தாய்மார்கள் தங்களின் பிரதிநிதியாக குழந்தைகளுக்கு இந்தச் சாறைத் தரலாம். இப்பழம், இதயவலி, மார்புவலிக்கு மிகச் சிறந்த மருந்தாகும். இரத்தக் குழாய்களின் அடைப்பை நீக்கி, ரத்தத்தைக் கொண்டு செல்ல இது உதவுகிறது. ஒரு ஆரஞ்சுப் பழம் மூன்று கப் பாலுக்கு இணையானது. நல்ல தூக்கத்தை இது வரவழைக்கிறது. தினமும் இதைச் சாப்பிட நீண்ட ஆயுள் உறுதியாகும். |
|||||||||||||||||||||||||||||||||||||||
![]() |
மாதுளை பலன்கள்: வயிற்றைப் பேனும் மாதுளை: பாபிலோனியாவின் தொங்கும் தோட்டத்தில் மாதுளை இருந்திருக்கிறது. இது மஞ்சள் காமாலையைப் போக்கி, கல்லீரல், இதயம், சிறுநீரகம் இவைகளையும் பாதுகாக்கிறது. பித்த வாந்தி உள்ளோர் இதைத் தேனுடன் சாப்பிட உடனடி நிவாரணம் உண்டு. மலத்துடன் ரத்தம் வெளியேறுவதை இது தடுக்கிறது. அறிவுத்திறனை அதிகரிக்கும் பழமாகவும் இது முதலிடம் பெறுகிறது. மாதுளம் பழத்திற்கு மாதுளங்கம் என்ற பெயரும் உண்டு. மாதுளம் விதைகளைச் சாப்பிட்டால் நீர்த்துப் போன சுக்கிலம் கெட்டிப்படுகிறது. மேக நோயின் பாதிப்பு ஏற்பட்டவர்கள் மாதுளை விதைகளைச் சாப்பிட்டால் பிரமேகம் பாதிப்பிலிருந்து நிவர்த்தியாகும். பிரமேக வியாதியால் ஏற்படும் இதய நோய்கள், இதய பலகீனம், நிவர்த்தியாகும். இரத்தவிருத்தி ஏற்படும். சீதபேதிக்குச் சிறந்த நிவாரணம் அளிக்கிறது. தொடர்ந்து நோயின் பாதிப்பால் பலகீனம் அடைந்தவர்கள் மாதுளம் பழத்தைச் சாப்பிட்டால் உடல் தேறும், உடல் எடை கூடும். தொண்டை, மார்பகங்கள் நுரையீரல், குடலுக்கு அதிகமான வலிமையை உண்டாக்குகிறது. ஆண்தன்மையில் பலகீனம் உள்ளவர்கள் மாதுளம்பழம் சாப்பிடுவதால் மிகுந்த சக்தியை அடைய முடிகிறது. மாதுளம்பழத்தின் மேல்புறம் ஒரு துவாரத்தைச் செய்து அதில் உள்ளுக்குச் சாப்பிடும் பாதாம் எண்ணெய் 15 மில்லிக்குக் குறையாமல் செலுத்தி எடுத்து ஒரு பாத்திரத்தில் வைத்து சூடு செய்தால் எண்ணெய் பூராவும் பழத்தில் கலந்துவிடும். இவ்வாறு தயாரிக்கப்பட்ட பழத்தைச் சாப்பிட்டால் கடுமையான இதய வலி இனஷா அல்லாஹ் நீங்கி விடும். நீடித்த இருமல் குணமாகும். பொதுவாக மாதுளம்பழச்சாற்றுக்கு நான்கில் ஒரு பாகம் சீனி கலந்து சாப்பிட்டாலும் நல்ல பலன் கிடைக்கும். மாதுளம் மரப்பட்டை அல்லது வேர்ப்பட்டையை வெட்டி பச்சையாக இருக்கும்போதே இதன் எடைக்கு எட்டு மடங்கு தண்ணீர் சேர்த்து பாதியாகச் சுண்டக் காய்ச்சியதை, காலை நேரத்தில் 30 மில்லியளவு சாப்பிட்டு வந்தால் வயிற்றில் உள்ள தட்டைப் பூச்சிகள் மலத்துடன் வெளியேறி விடும். மாதுளம் பூக்களைத் தலையில் வைத்துக் கட்டிக் கொண்டால் தலைவலி தீரும். வெப்பநோய் தீரும். மாதுளம் பூக்கள் அறுகம்புல், மிளகு, சீரகம் அதிமதுரம். சமமாகச் சேர்த்து கஷாயம் தயாரித்துக் கொண்டு, வேளைக்கு 30 மில்லி எடுத்து இதில் பசு வெண்ணெய் சேர்த்துக் கலக்கித் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், இரத்தத்தில் ஏற்பட்ட விஷத்தன்மை இனஷா அல்லாஹ் நீங்கும். அலர்ஜியை நிவர்த்திக்கும் மூலச்சூடும் வெட்டை நோயும் நீர்க்கடுப்பும் இனஷா அல்லாஹ் நிவர்த்தியாகும். மாதுளம்பூச்சாறு 300 கிராம் சேகரித்து 200 கிராம் பசு நெய் சேர்த்து பூச்சாறு சுண்டும் அளவிற்கு காய்ச்சி நெய்யை வடித்து வைத்துக் கொண்டு தினசரி இரண்டு தேக்கரண்டி வீதம் காலை, மாலை சாப்பிட்டு வந்தால், இரண்டு மாதத்தில் கடுமையான சயரோகப்பாதிப்பு, படிப்படியாகக் குறைந்து விடும். நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரித்து உடல் தேறும். தொடர்ந்து இருபது தினங்கள் இதே நெய்யை காலை மாலை சாப்பிட்டு வந்தால் எல்லா விதமான மூலநோயும் இனஷா அல்லாஹ் தீரும். மாதுளம் விதை, வேர்ப்பட்டை, மரப்பட்டை இவற்றைச் சமமாக எடுத்து உலர்த்திப் பொடித்து வைத்துக் கொண்டு, வேளைக்கு 5 கிராம் வீதம் சுடுதண்ணீரில் கலந்து சாப்பிட்டு வந்தால் பெண்களின் கர்ப்பாசய நோய்கள் அனைத்தும் நிவர்த்தியாகி பெண்களின் ஆரோக்கியம் நீடிக்குமாம்.
|
|||||||||||||||||||||||||||||||||||||||
![]() |
||||||||||||||||||||||||||||||||||||||||
![]() |
ஆப்பிள் பலன்கள்: ஆப்பிள் பழம் தினம் ஒன்று சாப்பிடுங்கள். மருத்துவரை நாடிச் செல்ல வேண்டியதில்லை.ஆப்பிள் பழம் எல்லாத் தரப்பு மக்களாலும் விரும்பிப் பயன்படுத்தப்படுகிறது. முக்கியமான விருந்துகளிலும், முக்கிய நிகழ்ச்சிகளிலும் உணவாகப் பயன்படுகிறது. மருத்துவத்தில் இதன் உபயோகம் அதிகரித்துள்ளது. ஆப்பிள் பழம் சிம்லா, காஷ்மீர் பகுதிகளில் மிக அதிகமாகப் பயிரிடப்படுகிறது. ஆப்பிள் எல்லாப் பருவ காலங்களிலும் கிடைக்கிறது. எல்லா ஊர்களிலும் வாங்க முடிகிறது. ஆப்பிள் பழத்தில் இரும்பு, புரோட்டீன், கொழுப்பு, பாஸ்பேட், சர்க்கரை, பொட்டாசியம், சோடியம், பெக்டின், மேலிக் யூரிக் அமிலங்கள், உயிர்ச் சத்துக்கள் பி1, பி2, சி, முதலியன அடங்கியுள்ளன. ஆப்பிள் பழத்தில் உள்ள ரசாயனக் கலவைகள் ஒன்றுக்கொன்று வேதியியல் முறையில் இணக்கமாகச் செயல்படுகிறது. ஆர்கானிக் கலவை இரும்புசத்தை எளிதில் உடல் கிரகிக்க உதவுகிறது. ஆப்பிள் பழம் சாப்பிடுவதால் இரத்த சோகை விரைவில் நிவர்த்தியாகிறது. இரத்த ஓட்டச் சுழற்சி சீராக இயங்குகிறது. தூக்கத்தில் எழுந்து நடக்கும் இயல்புடையவர்கள் குணமடைய, இரவில் இரண்டு ஆப்பிள் பழங்களைத் தண்ணீரில் போட்டு வைத்திருந்து அதிகாலையில் இதன் சாற்றைப் பிழிந்து கொடுத்துவந்தால் தூக்கத்தில் எழுந்து நடக்கும் ஆபத்தான நிலையில் இருந்து, ஆச்சரியப்படும்படியான நிவாரணத்தைப் இன்ஷா அல்லாஹ் பெறலாம். குடற் கிருமிகள் வெளியேற ஆப்பிள் பழத்தை நெருப்பில் சுட்டு சாப்பிட்டால் குடற் கிருமிகள் இன்ஷா அல்லாஹ் அழிந்துவிடும். ஆப்பிள் பழச்சாற்றைத் தேவைக்கு ஏற்ப தயாரித்து ஒரு பாத்திரத்தில் வைத்து சூடு செய்தால் பாகு பதம் வரும். இந்தப் பாகை எடுத்து வைத்துக்கொண்டு காலை, மாலை, இரண்டு தேக்கரண்டியளவு சாப்பிட்டு வந்தால் உயர் ரத்த அழுத்தம் சமநிலைக்கு வந்து, வயதுக்கு ஏற்ற அளவில் செயல்படும். இதய நோயாளிகளும், மூளையின் போஷாக்கு தேவைப்படுபவர்களும் இம்முறையில் பயன்படுத்திக் கொள்ளலாம். நல்ல பலனைக் கொடுக்கும். குதிகால் வாதம் உள்ளவர்கள் தினசரி ஆப்பிள் பழம் சாப்பிட்டு வந்தால் குதிகால் வாதம் இன்ஷா அல்லாஹ் படிப்படியாகக் குறைந்து குணமாகும். ஆப்பிள் ஜூஸ் : ஆப்பிள் பழம் ஒன்றைத் துண்டித்து எடுத்துக் கொள்ளவேண்டும். ஒரு துண்டு இஞ்சியைத் தோல் நீக்கி இதனுடன் சேர்த்துக் கொள்ள வேண்டும். கேரட் 500 கிராம் சேர்த்துக் கொள்ளவேண்டும். பனங்கற்கண்டும் தேவையான அளவில் சேர்த்து, ஒரு சிட்டிகை உப்பும் சேர்த்து மிக்சியில் அடித்து தினசரி சாப்பிட்டுவந்தால் இயற்கையான தாதுபலத்தைத் தரும். இதய நோய் பாதிப்பு வராமல் செய்துவிடலாம். புற்றுநோய் வராமல தடுக்கும். குறிப்பாக குடற்புற்று, ஆசனப்புற்றைத் தடுப்பதில் முக்கியமானது. உடம்பு செல்கள் புதுப்பிக்கப்படுகிறது. இளமை நீடிக்க உதவுகிறது. |
|||||||||||||||||||||||||||||||||||||||
![]() |
||||||||||||||||||||||||||||||||||||||||
![]() |
||||||||||||||||||||||||||||||||||||||||
![]() |
||||||||||||||||||||||||||||||||||||||||
![]() |
||||||||||||||||||||||||||||||||||||||||
![]() |
இஞ்சி என்ன இருக்கு: கால்சியம், கார்போ ஹைட்ரேட், பாஸ்பரஸ், நிகோடினிக் ஆசிட், விட்டமின் ஏ. யாருக்கு நல்லது: எல்லோருக்கும். அஜீரணக் கோளாறு, மூச்சுத் தொல்லை, மூட்டுவலி உள்ளவர்களுக்கு மிக நல்லது. யாருக்கு வேண்டாம்: வயிற்றுப்புண் உள்ளவர்களுக்கு. பலன்கள்: வாந்தி, குமட்டல், பித்த மயக்கம் ஏற்படும் போது இஞ்சி, வெள்ளை வெங்காயம் இரண்டையும் தேனில் கலந்து குறிப்பிட்ட அளவிற்கு சாப்பிட்டு வந்தால் வாந்தி, மயக்கம் இன்ஷா அல்லாஹ் போயே போய்விடும். இஞ்சி மட்டுமல்ல. அது காய்ந்து சுக்காக மாறினாலும் பல்வேறு நோய்களைத் தீர்க்கும் அருமருந்தாகச் செயலாற்றுகிறது. பித்தத்தை தணிக்கும். வாயுத் தொல்லையை நீக்கும். ஆயுளை நீடிக்கச் செய்யும். கொழுப்பைக் கரைக்கும். பிறந்த குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வயது வித்தியாசம் ஏதுமின்றி இஞ்சி மற்றும் சுக்கின் மருத்துவ குணங்கள் அனைவருக்கும் பயன்படுகின்றன. |
|||||||||||||||||||||||||||||||||||||||
![]() |
பூண்டு பூண்டு. வெங்காயக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு தோட்டப் பயிர். இது ஒரு சிறந்த உணவாக, மருந்தாக, வாசனைப் பொருளாக, அழகு சாதனப் பொருளாகப் பயன்படுகிறது. ஒரு பூண்டில் 6 முதல் 35 பூண்டுப் பற்கள் உள்ளன. பூண்டின் மருத்துவக் குணங்களால், ஸ்பெயின், இத்தாலி, சைனா போன்ற நாடுகளில் எல்லாவகை உணவுகளிலும் பூண்டு சேர்க்கப்படுகிறது. பூண்டில் அதிகளவு தாதுக்களும், வைட்டமின்களும் ஐயோடின், சல்பர், குளோரின் போன்ற சத்துக்களும் இருக்கின்றன. இனி… வெங்காயத்தை எந்தெந்த முறையில் பயன்படுத்தினால் என்னென்ன பயன்களை நாம் பெறலாம் என்பது பற்றிப் பார்ப்போம். |
|||||||||||||||||||||||||||||||||||||||
![]() |
வெங்காயம் 1) நாலைந்து வெங்காயத்தைத் தோலை உரித்து அதோடு சிறிது வெல்லத்தைச் சேர்த்து அரைத்துச் சாப்பிட, பித்தம் குறையும். பித்த ஏப்பம் மறையும். 2) சம அளவு வெங்காயச் சாறையும், வளர் பட்டைச் செடி இலைச் சாறையும் கலந்து காதில் விட, காது வலி குறையும். 3) வெங்காயச் சாறு, கடுகு எண்ணெய் இரண்டையும் சம அளவில் எடுத்துச் சூடாக்கி, இளம் சூட்டில் காதில் விட, காது இரைச்சல் மறையும். 4) வெங்காயத்தைத் துண்டுகளாக நறுக்கி, சிறிது இலவம் பிசினைத் தூள் செய்து சேர்த்து, சிறிது கற்கண்டுத் தூளையும் இவற்றைப் பாலுடன் சேர்த்துச் சாப்பிட, எல்லாவிதமான மூலக்கோளாறுகளும் நீங்கும். 5) வெங்காய நெடி சில தலைவலிகளைக் குறைக்கும். வெங்காயத்தை வதக்கிச் சாப்பிட, உஷ்ணத்தால் ஏற்படும் ஆசனக் கடுப்பு நீங்கும். 6) வெங்காயத்தைச் சுட்டு, சிறிது மஞ்சள், சிறிது நெய் சேர்த்து, பிசைந்து மீண்டும் லேசாகச் சுட வைத்து, உடையாத கட்டிகள் மேல் வைத்துக் கட்ட, கட்டி உடனே பழுத்து உடையும். 7) வெங்காயச் சாறு, சில வயிற்றுக் கோளாறுகளை நீக்கும். வெங்காயச் சாற்றை மோரில் விட்டுக் குடிக்க, இருமல் குறையும். 8) வெங்காயச் சாற்றையும், வெந்நீரையும் கலந்து, வாய் கொப்பளித்து, வெறும் வெங்காயச் சாறை பஞ்சில் நனைத்து பல் ஈறுகளில் தடவி வர, பல்வலி, ஈறுவலி குறையும். 9) வெங்காயப்பூ, வெங்காயத்தைச் சமைத்து உண்ண, உடல் வெப்பநிலை சமநிலை ஆகும். மூலச்சூடு குறையும். 10) வெங்காயத்தை அவித்து, அதோடு தேன், கற்கண்டை சேர்த்துச் சாப்பிட, உடல் பலம் ஏறும். 11) வெங்காயத்தை வதக்கி தேன் விட்டு இரவில் சாப்பிட்டு, பின் பசும்பால் சாப்பிட ஆண்மை பெருகும். 12) வெங்காயத்தை வதக்கி, வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர, நரம்புத் தளர்ச்சி குணமாகும். 13) படை, தேமல் மேல் வெங்காயச் சாற்றைப் பூசிவர மறைந்துவிடும். 14) திடீரென மூர்ச்சையானால், வெங்காயத்தைக் கசக்கி முகரவைத்தால், மூர்ச்சை தெளியும். 15) வெங்காயச் சாற்றையும், தேனையும் கலந்து அல்லது வெங்காயச் சாற்றையும், குல்கந்தையும் சேர்த்துச் சாப்பிட்டால், சீதபேதி நிற்கும். 16) வெங்காய ரசத்தை நீர் கலந்து குடிக்க, நன்கு தூக்கம் வரும். 17) பனைமரப் பதநீரோடு வெங்காயத்தை நறுக்கிப் போட்டு, சூடுபடுத்தி குடித்துவர, மேக நோய் நீங்கும். 18) வெங்காயம், அவரை இலை இரண்டையும் சம அளவு எடுத்து அரைத்துச் சாப்பிட, மேகநோய் குறையும். 19) வெங்காயம் குறைவான கொழுப்புச் சத்து கொண்டது. எனவே, குண்டானவர்கள் தாராளமாக வெங்காயத்தைப் பயன்படுத்தலாம். 20) பச்சை வெங்காயம் நல்ல தூக்கத்தைத் தரும். பச்சை வெங்காயத்தைத் தேனில் கலந்து சாப்பிடுவது நல்லது. 21) வெங்காயம் வயிற்றில் உள்ள சிறுகுடல் பாதையைச் சுத்தப்படுத்துகிறது. ஜீரணத்திற்கும் உதவுகிறது.” |
|||||||||||||||||||||||||||||||||||||||
| Copyright © webmaster : Abu Hadhi- 2010 @ Thulasiapattinam Thowheed Jamath web Team | Contact : webmastertpmtntj@gmail.com
|